Rock Fort Times
Online News

‘அண்ணன் சீர்’ திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம்: அரசாணை வெளியீடு…!

‘அண்ணன் சீர்’ திட்டத்தில் பயன்பெற ஆதார் கட்டாயம் என்றும் தகுதியுள்ள பெண்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை இல்லாதவர்கள் உடனே பதிவுக்கு விண்ணப்பிக்கலாம். ஆதார் வரும்வரை மாற்று ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தவெகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று ‘அண்ணன் சீர்’ திட்டம். இந்தத் திட்டம் மூலம் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் (1 பவுன்) மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமணத்தின்போது ஒரு பவுன் (8 கிராம்) தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை ஆகியவை வழங்கப்படவுள்ளன. இதற்கான நிகழ் நிதியாண்டில் முதல்கட்டமாக ரூ. 812 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கான தகுதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தனியே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், தகுதியான ஒப்பந்ததாரர் தோ்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயமும், பட்டுப் புடவையும் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற ஆதார் அட்டை கட்டாயம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்