திருச்சி உறையூர் சாலை ரோடு பகுதியில் அனுமதி இன்றி பாரதிய ஜனதா கட்சியின் கொடி கட்டப்பட்டு இருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் உரிய அனுமதி பெறப்படவில்லை என்பது தெரிய வந்தது .திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் மாவட்ட செயலாளர் நாகேந்திரன்/ உறையூர் மண்டல் தலைவர் ராஜேஷ், தினகரன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது உறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
