Rock Fort Times
Online News

வயலூர் முருகன் கோவிலில் பெண்ணிடம் 3 பவுன் தாலி செயின் திருட்டு !

திருச்சி தென்னூர் காயிதே மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரகுராமணி. இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 45). இவர் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தனது மாமியாரையும் அழைத்துக் கொண்டு திருச்சி வயலூர் முருகன் கோவிலுக்கு சென்றார். பின்னர் இருவரும் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் கோவில் வளாகத்தில் வழங்கப்பட்ட அன்னதானத்தை வாங்கி சாப்பிட்டனர். அப்போது ஏதேச்சையாக தனது கழுத்தில் கை வைத்து பார்த்த போது 3 பவுன் தாலி செயினை காணாமல் திடுக்கிட்டார். கூட்ட நெரிசலில் அவரது செயினை மர்ம ஆசாமிகள் யாரோ பறித்திருக்கலாம் என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்