Rock Fort Times
Online News

திருச்சியில் சட்டவிரோத லாட்டரி விற்பனை ! பரிசுத்தொகையை ஏப்பம் விட்ட ஆளுங்கட்சி பிரமுகர் எஸ்.வி.ஆர். மனோகர் உட்பட 3 பேர் கைது ! கூட்டாளிகளுக்கு போலீசார் வலை!

தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.ஆனால், அரசு அதிகாரிகளை ஏமாற்றியும், அதிகார வர்க்கத்தின் அத்தனை மூலை முடுக்குகளுக்கும் பணத்தை வாரி இறைத்தும் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் மாஃபியா கூட்டம் கன கச்சிதமாக ஈடுபட்டு வருகிறது.அப்படி திருச்சியில் செயல்படும் சட்டவிரோத லாட்டரி கும்பலின் முக்கியமானவராக கருதப்படுபவர் எஸ்.வி.ஆர் மனோகர்.  இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஜவுளி கடை, புத்தூர் நால்ரோடு அருகே ஹோட்டல் ஆகியவற்றை வைத்துள்ளார். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அக்கட்சி அனுதாபியாக காட்டிக்கொண்டு லாட்டரி விற்பனையை மேற்கொள்ளும் இவர் தற்போது ஆளுங்கட்சியான திமுகவில் ஐக்கியம் ஆகியுள்ளார். ஏற்கனவே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக இவர் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டு பல மாத சிறை வாசத்திற்கு பிறகு வெளியே வந்தார். இந்நிலையில்,திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த மாதவன், எஸ்.வி.ஆர் மனோகர் லாட்டரியில் விழுந்த பரிசுத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும் இது குறித்து கேட்க போனால் அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்த போது போலீசார் தெரிவித்ததாவது., மாதவன் மனோகரிடம் கேரள லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த சீட்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை விழுந்துள்ளது. ஆனால் இந்த பரிசுத் தொகையை மனோகர் மாதவனிடம் கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது மாதவனை மனோகரின் கூட்டாளிகளான மலைக்கோட்டையை வடக்கு தெருவை சேர்ந்த ரவுடி ரங்கராஜன், காளிமுத்து, பாஸ்கர், நெப்போலியன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாதவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மனோகர் மற்றும் இரண்டு பேரை செய்துள்ளோம். மற்றவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் அவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்