Rock Fort Times
Online News

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ” கேட் – பாஸ் ” தந்தவர் பெரியார் ! திருச்சியில் எம்.பி. துரை வைகோ பேட்டி

பெரியாரின் 51வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அன்னாரின் திருஉருவச்சி சிலைக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ தலைமையில் மதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எம்.பி.துரை வைகோ கூறியதாவது:- தமிழகத்தை பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்களுக்கு கல்வி, உரிமை பொருளாதாரம் முன்னேற்றம் பெரியாரால் வந்தது. இன்றும் சில சக்திகள் அவரை கொச்சைப்படுத்த வேண்டும் என தவறான கருத்துக்களை கூறுவதற்கு இருக்கின்றனர். பெரியார் இல்லை என்றால் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டினலின மக்கள் ஆலயத்திற்கு உள்ளே சென்று கடவுளை வழிபடுகிறார்கள் என்றால் அதற்கான கேட் பாஸ் கொடுத்தது பெரியார் தான். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு எனவேதான் 4வருடத்திற்கு முன்னே நான் பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்ற கருத்தை வைத்தேன். காரணம் கடவுளை வழிபடுபவர்கள் கூட பெரியாரை போற்றுகிறார்கள் என்றார். இந்நிகழ்வில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம் ,டிடிசி சேரன்,பகுதி செயலாளர் செல்லத்துரை ,பொன்மலைப்பட்டி கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்