Rock Fort Times
Online News

முட்டை விலை நிர்ணயம்! பண்ணையாளர்கள் திடீர் முடிவு!

முட்டை விலையை குறிப்பிட்ட விலைக்கு மேல் குறைத்து விற்கக் கூடாது என்று முட்டை பண்ணையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பில் – நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது முட்டை விலை 450 காசுகளாக உள்ளது. சமீப காலமாக கோழி தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வால் முட்டை பண்ணையாளர்கள் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள். இந்த நிலையில் முட்டை விற்பனை மைனஸ் 40 பைசா என இன்று நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் இந்த மைனஸ் 40 என்ற அளவிற்கு மிகாமல் விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு எவரேனும் 40 பைசாவுக்கு மேல் மைனஸ் கேட்டால் அந்தந்த பகுதி பண்ணையாளர்கள் அவர்களின் பகுதிக்கு உட்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டாரக்குழு தலைவரை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்