Rock Fort Times
Online News

நயன்தாரா – விக்னேஷ் தம்பதியினர் தஞ்சையில் குலதெய்வ வழிபாடு!

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 2005ஆம் ஆண்டு ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்றியவர் விக்னேஷ் சிவன். இவரது சொந்த ஊர் லால்குடி. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மகாபலிபுரத்தில் இருவரும் காதல்திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் வாடகை தாய் மூலம் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். விக்னேஷ் சிவனின் குலதெய்வம், தஞ்சை மாவட்டம், வழுத்தூர் ஆற்றங்கரை காஞ்சி காமாட்சி அம்மன் ஆகும். விக்னேஷ் சிவன் குலதெய்வ வழிபாட்டிற்காக இன்று தனது காதல் மனைவி நயன்தாராவுடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து கார் மூலம் குலதெய்வம் கோயிலுக்கு புறப்பட்டு சென்றார். தனது இரு குழந்தைகளையும் சென்னையில் தங்கள் வீட்டில் பெற்றோர் பராமரிப்பில் விட்டுவிட்டு வந்துள்ளனர். மதியம் 2 மணி அளவில் குலதெய்வ வழிபாட்டை முடித்துவிட்டு திருச்சி திரும்பும் நயன்தாரா விக்னேஷ் இருவரும் இன்று மாலை  தேஜஸ் ரயில் மூலம்  சென்னை செல்கின்றனா்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்