மிலாதுநபியை யொட்டி செப்டம்பர் 16 -ந்தேதி திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிறை சரிவர தென்படாததால் 17ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படுகிறது. அதன்படி, மிலாது நபி விடுமுறையை செப்டம்பர் 17 -ந் தேதிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே, செப்டம்பர் 16 -ம் தேதி திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் வழக்கம்போல செயல்படும். அரசு அறிவிப்பின்படி, 17ம் தேதி விடுமுறை நாளாகும். இத்தகவலை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஷரணப்பா தல்வார் தெரிவித்துள்ளார்.

Comments are closed.