திரைப்பட நடிகர் ஜீவா அவரது மனைவியுடன் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். சின்னசேலம் அருகே அவர்கள் சென்றபோது, கார் வந்த திசையில் சாலையை கடப்பதற்காக இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்தது. இதனால், இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக ஜீவா காரை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் ஜீவா மற்றும் அவரது மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து மாற்று கார் மூலமாக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி சேலத்திற்கு சென்றனர். இந்த விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த சின்னசேலம் போலீசார் விபத்தில் சிக்கிய காரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.