Rock Fort Times
Online News

இபிஎஸ் குறித்து விமர்சனம்: திருச்சியில் அண்ணாமலை உருவப்படம் எரிப்பு…!

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து விமர்சித்து வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் மத்திய பேருந்து நிலையத்தில் அண்ணாமலையின் உருவப் படத்தை எரித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன், மாவட்ட இணை செயலாளர் ஜாக்குலின், மாவட்ட துணை செயலாளர் வனிதா, பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள், சிந்தாமணி முத்துக் குமார், என்ஜினியர் இப்ராம்ஷா, மகளிர் அணி நசீமா பாரிக், இலக்கிய அணி பாலாஜி, எம்.ஜி.ஆர்.மன்றம் கலிலுல் ரகுமான், தொழிற்சங்கம் ராஜேந்திரன், ஐ.டி.பிரிவு வெங்கட் பிரபு, மீனவர் அணி தென்னூர் அப்பாஸ், பாசறை இலியாஸ், பீடி பிரிவு சகாபுதீன,  பகுதி செயலாளர்கள் என்.எஸ்.பூபதி, சுரேஷ்குப்தா, ரோஜர் ,  எம்.ஆர்.ஆர். முஸ்தபா, அன்பழகன், நாகநாதர் பாண்டி, ஏர்போர்ட் விஜி , கலைவாணன், புத்தூர் ராஜேந்திரன், திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார் மற்றும் ஜெ.பேரவை என்ஜினியர் ரமேஷ், மார்க்கெட் பிரகாஷ், கருமண்டபம் சுரேந்தர், கங்கை மணி, எம்ஜிஆர் மன்றம் நாட்ஸ் சொக்கலிங்கம், இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ்குமார் , மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, துணைத் தலைவர்கள் வக்கீல் புவனேஸ்வரி, ஆர்.கெளசல்யா, பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், எனர்ஜி அப்துல் ரஹ்மான், மாணவர் அணி ரஜினிகாந்த், மற்றும் வாழைக்காய் மண்டி சுரேஷ்குமார், எம்.ஜி.ஆர். மன்றம் அப்பாக்குட்டி. தென்னூர் ஷாஜகான்,
சகா. திருநாவுக்கரசு, அப்பு (எ) சுப்ரமணியன், கிஷோர், நிர்வாகிகள் கே.டி. அன்புரோஸ், வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டிபுதூர் வசந்தகுமார், உறந்தை மணிமொழியன், குருமூர்த்தி, காசிப்பாளையம் சுரேஷ், தர்கா காஜா, கே.பி.ராமனாதன், அரப்ஷா,கீழக்கரை முஸ்தபா, கன்னியப்பன், ஒத்தக்கடை மகேந்திரன், மணி கண்டன், இலியாஸ் ஷெரீப்,வட்டச் செயலாளர்கள் சதீஷ்குமார், வினோத் குமார், ராஜசேகர், காந்தி நகர் சரவணன், ஆரி, ஜோசப் ஜெபா, ஐ.டி.விங் பாபு, கதிரவன், நாகராஜ், கல்லுக்குழி முருகன், பொன். அகிலாண்டம், கட்பீஸ் ரமேஷ், ஏர்போர்ட் செல்லப்பா, மார்க்கெட் பிரகாஷ், பாலக்கரை ரவீந்திரன், தில்லை முருகன், சந்தோஷ் ராஜ்,டைமன்ட் தாமோதரன், கே.டி.ஏ. ஆனந்தராஜ், உடையான்பட்டி செல்வம், உறையூர் சாதிக், தில்லை விஸ்வா உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்