தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லூரியில், தமிழ் துறை முதுகலை இரண்டாம் ஆண்டு வகுப்பில் பேராசிரியை ஒருவர் மாணவர்களை சாதி பிரிவினை பற்றி பேசி வருவதாகவும், அவரை பணியிட மாற்றம் செய்யக்கோரியும் கடந்த 6 நாட்களாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்கள் தொடர் போராட்டம் காரணமாக, கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கல்லூரியின் அசாதாரண சூழல் கருதி கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காவலவரையறையின்றி முடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.