திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பொய்யாமொழியின் படத்துக்கு நாளை மாலை அணிவிப்பு….!
கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன் அறிக்கை
திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திராவிட இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கத்தின் புதல்வரும், திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் 25-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், அவரது உருவப்படத்திற்கு நாளை (28-08-2024) காலை 9 மணி அளவில் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சர்ருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது . இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.