Rock Fort Times
Online News

திருச்சியில் பஸ்களை இயக்குவதில் போட்டா போட்டி: அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்டுநர்கள் கடும் வாக்குவாதம்…! (வீடியோ இணைப்பு)

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பாலக்கரை, மேலப்புதூர் வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது.  அதன் பின்னால் அரசு பேருந்து ஒன்று ஸ்ரீரங்கத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம், பாலக்கரை, மேல புதூர் வழியாக மத்திய பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தது.  மேலப்புதூரை அடுத்து ஜோசப் கண் மருத்துவமனை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பேருந்து, தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்றது. உடனே தனியார் பேருந்து ஓட்டுனர், பேருந்தை வேகமாக இயக்கியதால் இரு பேருந்துகளும் உரசி கொண்டன.  இதனால், இரு பேருந்துகளிலும் இருந்த பயணிகள் அலறினார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.  உடனே தனியார் பேருந்து ஓட்டுனர் இறங்கி சென்டர் மீடியனில் ஏறி நின்று அரசு பேருந்து ஓட்டுநரை தகாத வார்த்தையில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு அவரும் வசை பாடினார். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதுகுறித்து தகவல் அறிந்த  பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர் . இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருச்சி சிட்டி பகுதியில் சில தனியார் பேருந்துகள் பயணிகளை ஏற்றுவதற்காக இதுபோன்று அடிக்கடி போட்டா போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால், அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.  இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்