Rock Fort Times
Online News

ஹாங்காங் சென்ற அரசுப்பள்ளி மாணவர்கள்: திறமைக்கு வெகுமதி அளித்த தமிழக அரசு…!

2023 – 24ல் அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் மன்ற செயல்பாடுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதன்பின் மாவட்ட அளவிலான மண்டலப்போட்டிகள் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. மாநில அளவிலான மன்ற போட்டிகள் மார்ச் மாதம் நடந்தது. தற்போது முதற்கட்டமாக மாநில அளவில் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களில், 20 மாணவர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை ஒருவரும் மற்றும் அலுவலர் ஒருவரும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஹாங்காங்கிற்கு கல்வி சுற்றுலா சென்றுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்