திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்: இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஏற்பாட்டில், ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை, ஹோலி கிராஸ் கல்லூரி, காஜாமலை மெயின் ரோடு ஜேகே நகர் மற்றும் டவுன்ஹால் பள்ளியில் மைதான மேற்கூரை மற்றும் டவுன் ஹால் தார் சாலை ஆகியவை அமைக்கப்பட்டன. இந்த திட்டப் பணிகளை மக்களின் பயன்பாட்டிற்காக கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார்.

அப்போது மாநகராட்சி மண்டலம் _2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா, ஸ்ரீரங்கம் கோட்ட உதவியாளர் ஜெயபாரதி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சந்தீப், மாமன்ற உறுப்பினர்கள் சாதிக் பாஷா, எல்ஐசி சங்கர், ஜாஃபர் அலி, வட்டச் செயலாளர்கள் உதயா ரஃபிக், கோவிந்தராஜ், சாமுவேல், தெற்கு மாவட்ட பிரதிநிதி முகேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Comments are closed.