Rock Fort Times
Online News

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் 2ந் தேதி நடக்கிறது: வைரமணி தகவல்!

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நடக்கிறது. இதுதொடர்பாக, திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க. வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருச்சி மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அவைத் தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில், திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழா, கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, மக்களவைத் தேர்தலுக்கு வாக்குச் சாவடி வாரியாக பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் மாநில,மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள், மாநகர கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்