Rock Fort Times
Online News

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி…!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உடல் நல குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 14-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய 21-ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு பெரும்பாலான தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று மக்களின் நன் மதிப்பை பெற்றுள்ளது. அதோடு மாநில கட்சி அங்கீகாரத்தையும் பெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்