திருவாரூர் மாவட்டம், சோழங்கநல்லூரைச் சேர்ந்தவர் கே.பாபு (48). திமுகவைச் சேர்ந்த தொழிலதிபரான இவர் காரைக்கால் துறைமுகத்தில் போக்குவரத்து வாகன ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். இவர் தஞ்சாவூரில் இன்று(09-06-2024) நடைபெற்ற புதுமனை புகுவிழாவில் பங்கேற்பதற்காக காரில் தனது மகன்
பாலாவுடன் திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு வந்தார். தஞ்சாவூர் ஞானம் நகருக்கு வந்தபோது காரை விட்டு இறங்கி மொய் கவர் வாங்கிவிட்டு மீண்டும் காரில் ஏறினார். அப்போது எதிரே வந்த கார் டிரைவர் இவரது காரை வழி மறித்து நிறுத்தி ஹாரன் அடித்தார். அப்போது காரை விட்டு இறங்கி வந்து கேட்ட பாபுவை காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில், பலத்த காயமடைந்த பாபு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், துணைக் கண்காணிப்பாளர்கள் நித்யா, பி.என். ராஜா உள்ளிட்டோர் விரைந்து வந்து பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொழில் போட்டி காரணமாக தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திருவாரூர் மாவட்டம், வைப்பூர் காவல் நிலையத்தில் பாபு ஏற்கனவே புகார் செய்திருப்பதும், அதன் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில் தஞ்சை தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1
of 917
Comments are closed.