நேற்று மாலை திருச்சியில் இருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அகமது முஸ்தபா என்ற பயணி தனது கை பையில் 10000 அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்கா டாலர்களின் இந்திய மதிப்பு 8.24 லட்ச ரூபாயாகும்.
