மோடிக்கு எதிராக பேசியதால் எனக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு குறைந்து வருகிறது : நடிகர் பிரகாஷ்ராஜ்.
மோடிக்கு எதிராக பேசியதால் எனக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு குறைந்து வருகிறது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார் . ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரசியல் விமர்சகர்கள் பலரும் பிரதமரும் மோடிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளனர் அந்த வரிசையில் இப்போது பிரகாஷ்ராஜ் தனது கருத்தை கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் வில்லன் நடிகராக கலக்கி வருபவர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் வில்லனாக நடித்து பெயர்பெற்றவர் ஆவார். இவர் சினிமாவை தாண்டி அரசியல் விமர்சகராகவும் இருந்து வருகிறார். குறிப்பாக மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் அதிரடியான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.இந்நிலையில், மோடிக்கு எதிராக பேசியதற்காக தனக்கு பாலிவுட்டில் இருந்து பட வாய்ப்புகள் தருவதில்லை என்கிற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். பாலிவுட்டில் சிங்கம், வாண்டட் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் வில்லனாக நடித்து கலக்கிய பிரகாஷ் ராஜ், கடந்த 2018-ம் ஆண்டு மோடிக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட பின்னர் தனக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் கிடைப்பது நின்று போனதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக தமிழில் விஜய்க்கு வில்லனாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். இதற்கு அடுத்தபடியாக ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்திலும் வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார்.
