Rock Fort Times
Online News

திருச்சியில் பரபரப்பு சம்பவம் : சாமி வந்தது போல நடித்து உறவினர் கழுத்தை அறுத்த பூசாரிக்கு சரமாரி அடி…!

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள தாயனூரை சேர்ந்தவர் வைரமணி (37). இவர் அங்குள்ள கருப்பசாமி கோவிலில் பூசாரியாக இருந்து வருவதோடு அருள் வாக்கும் சொல்லி வருகிறார். இவரது உறவினர் பழனியாண்டி(55). இவர், அதே கோவிலில் முன்பு அருள்வாக்கு கூறி வந்துள்ளார். இந்நிலையில்
சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த வைரமணி, சாமி வந்தது போல பழனியாண்டி வீட்டுக்கு சென்று தோஷம் கழிப்பதாக கூறி அவரை கோவிலுக்கு அழைத்து வந்துள்ளார். கோவிலுக்கு வந்த பழனியாண்டியை படுக்க வைத்து, அவரது கழுத்தில் எலுமிச்சம்பழத்தை வைத்து, அதை அறுப்பது போல கழுத்தையும் சேர்த்து அறுத்து விட்டார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் வைரமணியை பிடித்துக் கொண்டு பழனியாண்டியை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதனைத் தொடர்ந்து வைரமணியை அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்