Rock Fort Times
Online News

விராலிமலை அருகே ஒரு தீப்பொறியால் வெடித்து சிதறிய பட்டாசுகள்- ஒருவர் உயிரிழப்பு…! – (வீடியோ இணைப்பு)

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள அத்திப்பள்ளம் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

 

இந்த வெடி விபத்தில் அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த கார்த்திக் என்பவர் உடல் கருகி இறந்து போனார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டாசு வைத்திருந்த குடோனுக்கு அருகே வெல்டிங் பற்ற வைக்கும் போது அதிலிருந்து ஏற்பட்ட தீப்பொறி எதிர்பாராத விதமாக பட்டாசு மேல் பட்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்