Rock Fort Times
Online News

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான பெலிக்ஸ் ஜெரால்டிடம் ஒரு நாள் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி …!

தமிழ்நாடு  பெண் போலீசார் குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்து சமூக வலைதளங்களில் பரவ விட்ட சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த  ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு  திருச்சி போலீசாரால்  டெல்லியில் கைது செய்யப்பட்டார்.  திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீன் கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த
மனு இன்று(20-05-2024) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து  அவர் திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை  போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி போலீஸ் சார்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த  மனு மீதான விசாரணை  பகல் 1-30 மணிக்கு  நடைபெற்றது.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயப்பிரதா,  பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்ததோடு நாளை மாலை 3 மணிக்கு மீண்டும் ஆஜர் படுத்த உத்தரவிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்