Rock Fort Times
Online News

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் காற்று, மழையால் சாலையில் சாய்ந்த மரம் அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி…!

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதேபோல, திருவெறும்பூர் பகுதியில் நேற்று காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது கல்லணை செல்லும் சாலையில் அரசங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையோரம் இருந்த மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இந்த மரம் இன்று (20.05.2024) காலை வரை அகற்றப்படாததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
மேலும், இந்த வழியாக கல்லணைக்கு செல்லும் பேருந்து பாதியில் திருப்பி விடப்பட்டது.  இதனால், அரசங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஆகவே, சாலையில் விழுந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
**

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்