Rock Fort Times
Online News

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் சத்யராஜ்-ரசிகர்கள் அதிர்ச்சி…!

மக்கள் மனம் கவர்ந்த அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்- நடிகைகள், ரசிகர்களை அதிகம் கவர்ந்த கிரிக்கெட் வீரர்கள் போன்ற பலரது வாழ்க்கை வரலாறுகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இதில் முன்னணி ஹீரோக்கள், ஹீரோயின்கள் கதாநாயகன், கதாநாயகிகளாக நடித்துள்ளனர். அந்தவகையில்
பெரியார், காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, நடிகை சாவித்திரி, சில்க் ஸ்மிதா, கிரிக்கெட் முன்னணி வீரர் டோனி என பல ஜாம்பவான்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இந்த படத்தில் மோடியாக நடிகர் சத்யராஜ் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சத்யராஜ் பெரியாரின் தீவிர தொண்டர். பெரியார் வாழ்க்கை வரலாற்று கேரக்டரில் நடித்திருக்கிறார். தற்போது ஆன்மீகவாதியான மோடியின் வாழ்க்கை வரலாற்று கதாபாத்திரத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்று தெரியவில்லை என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து நடிகர் சத்யராஜ் கூறுகையில், “எனக்கும், இது புது செய்தி. வாய்ப்பு வந்தால் பின்னர் யோசிக்கலாம். நாத்திக கருத்துகளை அதிகம் பேசிய எம்.ஆர்.ராதா ஏகப்பட்ட படங்களில் ஆன்மிகவாதியாக நடித்துள்ளார் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்