திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு அட்சய பாத்திரமாக விளங்கி வந்தவர் ரெங்கராஜ தேசிக சுவாமிகள். இவர், துறையூரில்
அகத்தியர் சனமார்க்க சங்கத்தை நிறுவினார். இவர் சித்தர்கள் மேல் நம்பிக்கை கொண்டு அவர்கள் வழியை பின்பற்றி திருமணம் செய்து கொள்ளாமல் பொதுமக்களுக்கு பசி பிணியை போக்கும் வகையில் துறையூரில் ஓங்கார குடிலை நிறுவி அதில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு காலை மற்றும் மதியம் அன்னதானம் வழங்கி வந்தார். கடந்த 35 ஆண்டு காலமாக இப்பணி தொய்வின்றி நடந்து வருகிறது. இந்நிலையில் வயது மூப்பு காரணமாக சுவாமிகள் நோய்வாய்ப்பட்டு கடந்த 1 மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். பக்தர்களின் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் இன்று(15-05-2024) நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.

Comments are closed.