சென்னையை சேர்ந்த ராஜேஷ் (22), ஏழுமலை (30), விக்கி (28), யுவராஜ் (24) மற்றும் அவரது நண்பர் என 5 பேர் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த வயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது மாடு ஒன்று குறுக்கே வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. இடுபாடுகளுக்குள் 5 பேரும் சிக்கிக் கொண்டனர். இதனை கண்டதும் அந்த வழியாக சென்றவர்கள் ஓடிச் சென்று காரில் இருந்தவர்களை மீட்டனர். இதில் ராஜேஷ், ஏழுமலை, விக்கி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
இந்த விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.