Rock Fort Times
Online News

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்பனை :  31 பேரை தட்டி தூக்கியது காவல்துறை…!

திருச்சியில் கஞ்சா, குட்கா, போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்து வருவதாகவும், இதனால் இளைய சமுதாயம் சீரழிந்து வருவதாகவும் திருச்சி மாநகர போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார்.
இதனால், போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.  சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த பஸ்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.  அப்போது சென்னையிலிருந்து திருச்சி வந்த பஸ் ஒன்றில்14 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.  அதனை கடத்தி வந்ததாக  திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்கிற தாவூத் (வயது 20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல, திருச்சி மாநகரில் நீதிமன்ற பகுதி, ஸ்ரீரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை நகர், உறையூர், அரசு மருத்துவமனை பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக 27 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், உறையூர் பகுதியில் சூதாடியதாக  2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் இந்த அதிரடி வேட்டையில் மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்