திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் மொத்த விற்பனை செய்து வருவதாக திருச்சி உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் மண்ணச்சநல்லூர் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது ஆனந்தபிரகாஷ் என்பவர் வீட்டில் பெட்டி, பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த
40 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், லால்குடியை அடுத்த மாந்துறை பகுதியை சேர்ந்த குரலரசன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை கொண்டு சென்ற போது பிடிபட்டார். தொடர்ந்து கல்லக்குடியில் அக்பர் அலி என்பவரிடமிருந்து 14 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு மேல் நடவடிக்கைக்காக கல்லக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சோதனையின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்புச்செல்வன், செல்வராஜ், இப்ராஹிம், கந்தவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுபோன்று புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் 99449 59595 என்ற தொலைபேசி எண்ணிலும், மாநில புகார் எண் 94440 42322 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.