Rock Fort Times
Online News

மக்களே கவனம்! நாளை முதல் தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்…

கோடை வெயில் இந்த ஆண்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் தனது கோரமுகத்தை காட்டத்தொடங்கிய வெயில்.. ஏப்ரல் முழுவதும் உக்கிரமாக இருந்தது. இதனால், மக்கள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகினர். அதிலும். தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இயல்பை விட இந்த ஆண்டு மிக அதிகமாக வெப்பம் நிலவியதால் மக்கள் தவித்து வருகிறார்கள். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே யோசிக்கும் அளவுக்கு வெப்பம் தகிக்கிறது.

நீர் ஆகாரங்கள் அதிகம் உட்கொண்டு வெயிலின் தாக்கத்தை சமாளித்து வருகிறார்கள். இதுவரை பார்த்தது வெறும் ட்ரெயிலர்தான் இனிதான் மெயின் பிக்‌ச்சரே இருக்கு என்று சொல்லும் அளவுக்கு மக்களை பயம் காட்ட வர இருக்கிறது அக்னி நட்சத்திரம். அதன்படி பார்த்தால், இந்த ஆண்டு கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. இந்த கத்திரி வெயில் வரும் 28 ஆம் தேதி வரை, 25 நாட்கள் தொடர்ந்து வாட்டி வதைக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்