Rock Fort Times
Online News

நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ! பேரனே தாத்தாவைக் கொன்றது போலீஸ் விசாரணையில் அம்பலம்!

நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாத்தாவுக்கு பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸை கொடுத்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல்லில் உள்ள ஒரு உணவகத்தில் சண்முகநாதன் என்பவரது மகன் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி சென்றுள்ளார். மகன் வாங்கி கொடுத்த சிக்கன் ரைஸை ஆசையாக சண்முகநாதன் மற்றும் நதியா என்பவர் சாப்பிட்டுள்ளனர். இதையயடுத்து சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போக, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர் . தீவிர சிகிச்சை பிரிவில் இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சண்முகநாதன்(72) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உணவகத்தில் மகன் பார்சல் வாங்கி வந்த சிக்கன்ரைசை சாப்பிட முதியவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் அந்த சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்தது தடயவியல் சோதனையில் அம்பலமாகி உள்ளது.

இதையடுத்து சண்முகநாதனின் மகன் மற்றும் சிக்கன் ரைஸ் கடைக்காரரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) கலந்து கொடுத்ததை போலீஸ் விசாரணையில் பகவதி ஒப்புக்கொண்டார். கல்லூரி மாணவனான பகவதிக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை தாத்தா சண்முகம் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பேரன் பகவதி, சிக்கன் ரைசில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து தாத்தா சண்முகத்தை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பகவதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்