Rock Fort Times
Online News

யோகநரசிம்மர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக படி ஏறிய பக்தர் பலி…!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் யோக நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் 1305  படிகள் வழியாக ஏறிச்சென்றார். 1200வது படியை கடந்தபோது முத்துக்குமாருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது வெயில் கொளுத்தி வருவதால் முத்துக்குமார் வெயிலின் தாக்கத்தால் இறந்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது. சாமி தரிசனம் செய்ய கோவிலின் படியேறி நபர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்