இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார்(28) இன்று (2-5-2024) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இராக்கதன், மேதகு போன்ற படங்களுக்கு பிரவீன்குமார் இசையமைத்திருக்கிறார். சிறந்த இசையை வழங்கி வளர்ந்து வந்த இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல் நலக்குறைபாட்டால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்திருக்கிறார். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட இருக்கிறது. இளம் வயதிலே இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமாகி இருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Comments are closed.