ராசிபுரம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா(47).இவர் ஆயில்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு பணிக்கு சென்ற அவர் இரவு 10.30 மணிக்கு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

திருச்செங்கோடு-ராசிபுரம் சாலை கல்லுப்பாளையம் பிரிவு சாலை அருகே சென்றபோது அந்த வழியாக கட்டுப்பாட்டை இழந்து வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த தலைமைக் காவலர் அமுதா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.