Rock Fort Times
Online News

திருச்சி ஏர்போர்ட் பகுதி அதிமுக சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு…!

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஏர்போர்ட் பகுதி கழகத்தின் சார்பாக கோடைகால நீர்மோர் பந்தல் கே.கே.நகர் எல்ஐசி காலனியில் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஏர்போர்ட் பகுதி செயலாளர்  ஏர்போர்ட் விஜி தலைமை தாங்கினார்.   கட்சியின் அமைப்புச் செயலாளர் ரத்தினவேல்,  ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன்,  ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் ஜோதிவாணன், அரவிந்தன்,  ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன்,  நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஜாக்குலின்,  ஏ.டி.பி.  ராஜேந்திரன்,  அன்பழகன்,  கலைவாணன், பூபதி, சுரேஷ்குப்தா, வக்கீல் எட்வின் ஜெயக்குமார்,
சகாபுதீன்,  இலியாஸ்,  டி ஆர்.சுரேஷ்குமார்,  சாத்தனூர் சதீஷ்குமார், ராஜசேகர், செல்லப்பா, ஹரிதாஸ், காந்திநகர் சரவணன், விநாயகமூர்த்தி, ராஜா,  ,உடையான் பட்டி செல்வம்  ஐடி.வெங்கட் பிரபு, நாகராஜ்,  இன்ஜினியர் ரமேஷ், நாட் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்