திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சின்ன ஏரியில் கழிவுநீர் கலப்பதாலும், சுற்றி உள்ள கடைகள் மற்றும் மருத்துவமனை கழிவுகள் கலப்பதாலும் ஏரி நீர் மாசடைந்து வருகிறது. தண்ணீரின் நிறமும் மாறி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஏரியில், கழிவு நீர் தொடர்ந்து கலந்து வருவதால் ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன.
அவைகள் அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது.

ஆகவே, செத்து மிதக்கும் மீன்களை அகற்றவும், ஏரியில் இனி கழிவுநீர் கலக்காதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.