சென்னையிலிருந்து திருச்சி வழியாக திருச்செந்தூர் கோவிலுக்கு திருவள்ளூரை சேர்ந்த கணேஷ் பாபு(58), சென்னையை சேர்ந்த ரவி(47), பாலமுருகன்(44), மதன் குமார்(42) ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்களின் கார் திருச்சி அருகேயுள்ள பாத்திமா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பால தடுப்பில் மோதி கவிழ்ந்து கார் விபத்துக்குள்ளானது.
இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக விபத்தில் காயமடைந்த நால்வரையும் மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கணேஷ் பாபு மற்றும் ரவி ஆகியோர் உயிரிழந்தனர் மற்ற இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.