Rock Fort Times
Online News

திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.70 லட்சம் தங்கம் பறிமுதல்…! (வீடியோ இணைப்பு)

துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஆண் பயணி ஒருவர் தனது உடலில் பேஸ்ட் வடிவில் 3 பாக்கெட்டுகளில் ரூ.70.58 லட்சம் மதிப்புள்ள 977 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தங்கத்தை கொடுத்து அனுப்பியது யார்? ,யாரிடம் கொடுக்கச் சொன்னார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்