Rock Fort Times
Online News

திருச்சியில் அதிமுக பிரமுகரின் வீட்டிற்குள் புகுந்து பொருட்கள் சூறை…!

திருச்சி கள்ளர் தெரு சங்கிலி கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரம் பிள்ளை. இவரது மகன் டி.எஸ்.கோவிந்தன். அதிமுக பிரமுகர் .இவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் இவரது வீட்டிற்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியது.

இதுகுறித்து கோட்டை போலீசில் கோவிந்தன் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக நிர்வாகியின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்