Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் உள்ள 234 எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தேர்தல் அதிகாரிக்கு மனு…!

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகின்றன. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் காரணமாக தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் அனைத்தும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்து விட்டதால் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு, எம்எல்ஏக்கள் இ-மெயில் மூலம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் மனுக்கள் மீது ஓரிரு நாளில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்