Rock Fort Times
Online News

திருச்சியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: படுகாயம் அடைந்த வாலிபர் உயிரிழப்பு…!

திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகா புரத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் தனுசுராஜ் (வயது 22). இவர் சம்பவத்தன்று தென்னூர் பாரதி நகரை சேர்ந்த மணிகண்டன் ( 35 )என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அரியமங்கலம் எஸ்.ஐ.டி.அம்பிகாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில், திருவெறும்பூர் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த சரண் ( 22) என்பவர் நண்பரான சச்சின் (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த தனுசுராஜ், மணிகண்டன், சச்சின் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்