திருச்சி, பெரம்பலூர் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் – மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளர் வேண்டுகோள்…!
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுகவுக்கும், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்ரீரங்கம் மற்றும் லால்குடி தொகுதிகளை உள்ளடக்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் எஸ்.ஆர்.கிஷோர்குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மதவாத சக்திகளையும், மதவாத சக்திகளுக்கு கடந்த காலங்களில் கைப்பாவையாக இருந்தவர்களை எதிர்த்தும், தமிழக மக்கள் நலன் சார்ந்த ஒரு சிறந்த வரலாற்று முடிவை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் எடுத்துள்ளார். நம்மவரின் இந்த நல்லதொரு முடிவை ஏற்று இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மறுமலர்ச்சி திமுகவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அருண் நேருவின் வெற்றிக்கும் மக்கள் நீதி மய்ய திருச்சி தெற்கு மாவட்ட தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.