Rock Fort Times
Online News

தி.மு.க. அரசை கண்டித்து அதிமுக சார்பில் 12ம் தேதி மனிதச் சங்கிலி-பெருந்திரளாக பங்கேற்க முன்னாள் எம்.பி. ப.குமார் அழைப்பு…!

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களின் விற்பனை அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து
வருகிற 12-03-2024 ம் தேதி (செவ்வாய் கிழமை) காலை 10 மணியளவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட லால்குடி நகரம், பூவாளூர் பேரூர், புள்ளம்பாடி பேரூர், கல்லக்குடி பேரூர், மற்றும் துவாக்குடி நகரம், கூத்தைப்பார் பேரூர், பொன்மலை பகுதி, அரியமங்கலம் பகுதி, திருவெறும்பூர் பகுதி, மணப்பாறை நகரம், பொன்னம்பட்டி பேரூர் ஆகியவற்றில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இதில், கட்சியின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்