Rock Fort Times
Online News

நிதியமைச்சர் பட்ஜெட் வாசிப்பை கிண்டல் அடிக்கிறது பாஜக!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசித்தார். பல்வேறு இணைய தளங்கள் வாயிலாகவும் உரை நேரலையாக ஒளிபரப்பாகியது. சட்டப்பேரவையில் நிதி அமைச்சரின் தமிழ் வாசிப்பை பாஜகவினர் கிண்டலடித்து வருகின்றனர். வெளிநாட்டில் படித்து அங்கேயே பணிபுரிந்தவரான பழனிவேல் தியாகராஜன், தமிழில் சரளமாகவும், திடமாகவும் பேசக்கூடியவர். புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகளுடன் அவரது நறுக் பேச்சு இந்திய அளவில் பிரபலமானது. ஆனால் தமிழ் வாசிப்பில் சற்றுத் தடுமாறுகிறார். இதுவே கிண்டலுக்கு ஆளாகி வருகிறது. நிதியமைச்சரின் இந்த தமிழ் தடுமாற்றத்தை பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா டிவிட்டரில் ‘சுக்குமி, லகுதி, ப்பிலி’ என கிண்டல் செய்துள்ளார். இதையே இதர பாஜகவினர் ’சாப்பா டுபோ டப்ப டும்’ என்பது போன்ற வாக்கியங்களால் வழிமொழிந்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்