Rock Fort Times
Online News

5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் உடல் கருகி பலி…( பதை பதைக்க வைக்கும் வீடியோ)

தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.குறிப்பாக லாரிகள், கண்டெய்னர்கள் என பல ஆயிரம் கனரக வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் மலைப்பாதை பகுதி சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அத்துடன் கட்டமேடு முதல் போலீஸ் சோதனைச்சாவடி வரை உள்ள 3 கிலோ மீட்டர் சாலை மிகவும் சரிவாகவும், வளைவாகவும் காணப்படுகிறது.இதனால், இப்பகுதியின் வழியே மலைப்பாதையில் கீழ்நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றன.இந்நிலையில், தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள இரட்டை பாலத்தின் வழியாக நேற்று(24-01-2024) சென்று கொண்டிருந்த 2 லாரிகள், 3 கார்கள் அடுத்தடுத்து பயங்கரமாக மோதி விபத்தில் சிக்கிக்கொண்டன.

இதில், 2 கார்கள், ஒரு லாரி தீப்பிடித்துஎரிந்தன. இந்த கோர விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஒரு லாரி பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்தது. தகவல் வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துதீயை அணைத்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்கள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்