Rock Fort Times
Online News

சேலத்தில் பரபரப்பு: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி காட்டியவர்கள் கைது

சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்துக்கு இன்று(11-01-2024) வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதனுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில், சமீபத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுடன் ஆளுநர் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினர் ஆளுநர் ஆர். என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடி காட்டினர். ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டியதாக இந்திய மாணவர் சங்கத்தினர், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு சாலை வழியாக சேலத்தில் இருந்து கோவைக்கு ஆளுநர் செல்ல உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்