Rock Fort Times
Online News

திருச்சி மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா ஐபிஎஸ் நியமனம்..!

திருச்சி மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த காமினி ஐபிஎஸ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ரூபேஸ் குமார் மீனா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ரூபேஷ் குமார் மீனா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். புகழ்பெற்ற டெல்லி ஐஐடியில் வேதியியல் பொறியியல் பட்டம் பெற்றவர். 2004ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, டிசம்பர் 12, 2005 அன்று ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவுகளில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். சென்னை சிவில் சப்ளைஸ் சிஐடி பிரிவின் ஐஜியாக பணியாற்றிய இவர் தற்போது திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனராகவும், டி.ஐ.ஜி.ஆகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்