Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் 32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்-16 பேருக்கு பதவி..!

தமிழ்நாட்டில் 32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-

*ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரை கிருஷ்ணகிரி எஸ்.பியாக பணியிட மாற்றம்.
* மதுரை எஸ்.பி சிவபிரசாத் தேனி எஸ்.பியாக பணியிட மாற்றம்.
* தேனி எஸ்.பி.டோங்கரே பிரவீன் ரமேஷ், மதுரை எஸ்.பியாக பணியிட மாற்றம்.
* காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக பணியிட மாற்றம்.
* சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக தீபக் விழுப்புரம் எஸ்.பி ஆக பணியிட மாற்ற்றம்.
* விழுப்புரம் எஸ்.பி ஷஷாங் சாய் சென்னை கியூ பிரிவு சிஐடி எஸ்.பியாக பணியிட மாற்றம்.
* அரியலூர் எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா விருதுநகர் எஸ்.பியாக பணியிட மாற்றம்.
* கோவை வடக்கு துணை ஆணையர் சந்தீஷ் ராமநாதபுரம் எஸ்.பியாக பணியிட மாற்றம்.

* ஐஜி ஆர். தமிழ் சந்திரன் கூடுதல் டிஜிபி யாக பதவி உயர்வு

* மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் டிஜிபியாக ஆர்.தமிழ்சந்திரன் நியமனம்.
* ஐபிஎஸ் அதிகாரி வி.ஜெயஸ்ரீ ஐஜியாக பதவி உயர்வு.
சென்னையில் காவல்துறை நடவடிக்கை பிரிவு ஐஜியாக ஜெயஸ்ரீ நியமனம்.

* டிஐஜி சாமுண்டீஸ்வரி ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி எஸ்.லட்சுமி சென்னையில் ஆயுதப்படை பிரிவு ஐஜியாக நியமனம்.
* ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.ராஜேஸ்வரி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர்- செயலாளராக நியமனம்.
* ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.ராஜேந்திரன் ஆவடியில் தலைமையக போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம்.
* ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.எம் முத்துசாமி, தமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியின் கூடுதல் இயக்குனராக நியமனம்.
* ஐஜியாக பதவி உயர்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மயில்வாகனன் சென்னை அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமனம்.
* சரோஜ்குமார் தக்கூர் ஐபிஎஸ் வேலூர சரக டிஜிபியாக நியமனம்.
* சென்னை தெற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையர் மகேஸ்குமார் பதவி உயர்வு பெற்று இணை ஆணையராக நியமனம்.
* பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள தேவராணி, சென்னை வடக்கு போக்குவரத்து காவல் இணை ஆணையராக நியமனம்.
* காவல் கண்காணிப்பாளராக உள்ள ஆர். திருநாவுக்கரசு பதவி உயர்வு பெற்று உளவுப்பிரி டிஐஜியாக நியமனம்.
* ஜி.ராமர் ஐபிஎஸ் சென்னையில் ரயில்வே டிஜிபியாக நியமனம்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்