திருச்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கருத்தரங்கம்…அரசு தலைமை கொறடா பங்கேற்பு…
முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி கி. ஆ.பெ. விஸ்வநாதம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற” சட்டமன்ற நாயகர் கலைஞர்” எனும் தலைப்பில் கருத்தரங்கு இன்று(6-1-2024) நடந்தது. அரசு தலைமை கொறடா கோ.வி. செழியன் தலைமை தாங்கினார். இக்கருத்தரங்கில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேசினர்.


இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், ஸ்டாலின்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன், மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, அரசு சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன் , மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.