திமுக இளைஞரணி செயலாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார். அவர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று திமுக இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து பேசி கட்சியை பலப்படுத்தி வருகிறார். இந்நிலையில் திமுக இளைஞர் அணி சார்பில் டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலத்தில் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக மாநாட்டின் தேதி மாற்றப்பட்டது.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட “திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு” ஜனவரி 21ம் தேதி சேலத்தில் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, மு.க.ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக இருந்தபோது முதல் மாநில மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.